சூரத்துல் அஸ்ர்
அல்- அஸ்ர் அத்தியாயத்தின் பெயர் காரணம் :-
இந்த அத்தியாயத்தில் அல்-அஸ்ர் என்ற சொல் முதற் சொல்லாக வருவதால் அதுவே இதன் பெயராக அமைந்துள்ளது.

அருளப்பட்ட காலம்;
முஜாஹித்(ரஹ்), காதாதா (ரஹ்), முகாத்தில் (ரஹ்) ஆகியோர் மதீனாவில் அருளப்ப்டதாகக் கூறினாலும் பெரும்பாலோர் மக்காவில் அருளப்பட்டதென்றே தெரிவிக்கின்றனர்.

அத்தியாயயத்தின் கருத்து
நம்பிக்கை கொண்டு, நற்செயலாலாற்றி உண்மையையும் பொறுமையையும் ஒருவகுக்கொரவர் பொதித்துக் கொண்டு வாழ்வோரே வாழ்வில் வெற்றி பெறுவர். ஏனையோர் பேரிழப்பிற்கு ஆளாவர்.

பொது அறிவு
மனிதன் காலமெல்லாம் அழிந்து போகும் பொருளைத் தேடுவதிலும், பிரிந்து செல்லும் மனைவி மக்கள், உற்றார் உறவினர், நண்பர்களோடு உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதிலுமே செலவிடுகிறான். விலைமதிப்பற்ற பொன்னான நேரங்களை இவ்வாறு வீணாக்குகிறானே தவிர தனது பிறப்பின் உண்மையான நோக்கத்தைப் பற்றி சற்றேனும் சிந்தித்துப் பாhப்பதில்லை. அவனது எண்ணம் தவறானது என்பதையும் அவன் உயர்ந்ததோர் நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டி ருக்கிறான் என்பதையும் உணர்;த்துவதற்காகவே இவ்வத்தியாயம் அருளப்பட்டது. இறுதியில் அவனது தவறானபோக்கு பெரும் இழப்பிற்கே கொண்டு செல்லும். ஆகவே அவன் வெற்றி பெறும் வழிகள் என்ன என்பது இங்கு விளக்கப்படுகிறது.

அருளப்பட்ட காரணம்
ஹஸ்ரத் அபூபக்ர்(ரலி) அவர்களின் பழைய தோழரான கல்தா இப்னு உஸைத் என்பவர் ஒரு நாள் அபூபக்ர்(ரலி) அவர்களிடம் சற்று கிண்டலாக, நண்பரே! முன்னர் உமது திறமையாலும் உழை-ப்பாலும் வாணிபத்தில் பெரும் பொருளீட்டி வந்தீர். இப்போது உமது மூதாதையர் மர்க்கத்தையும் ஒதுக்கித்தள்ளிவிட்டீர்! நமது குல தெய்வங்களான லாத்து, உஸ்ஸாவை வணங்குவதையும் விட்டொழித்துவிட்டீர்! அதனால் அவற்றின் அன்பையும் ஆதரவையும் இழந்து பெரும் நஷ்டத்-திலல்லவா உள்ளீர். என்னாயிற்று உமக்கு? எனக் கேட்டார். கல்தாவின கடுஞ் சொற்களைக் கேட்ட அபூபக்கர்(ரலி) அவர்கள் 'சத்தியத்தை ஏற்று நற்செயலாற்றுவோர் ஒருபோதும் நஷ்டமடையமாட்டர்' எனச்சட்டென பதிலளித்தார்கள். இதை உறுதிப்படுத்தவே இவ்வத்தியாயத்தை அருளினான்வல்ல நாயன். (ஆதாரம் : தஃப்ஸீர் பத்ஹுல் அஸீஸ்)