குர்ஆன் ஓதுதல் என்றதும் நமது மனத்திரையில் ஓடும் காட்சி.. சிறுவர்கள் புடைசூழ மதரஸாக்களில் ஹஜ்ரத்துகள் கையில் கம்போடு ஓதிக் கொடுக்கும் காட்சிதான். நம்மில் எத்தனையோ பேர் தம் குழந்தைகளை குர்ஆன் கற்க மதரஸாக்களுக்கு அனுப்புகிறோம். நம்மையும் நம் பெற்றோர்கள் அனுப்பினார்கள். காலங்கள் உருண்டோட.. நாம் மதரஸாக்களில் கற்ற குர்ஆனை சிறுகச் சிறுக மறந்துவிடுகின்றோம். வேறு சிலரோ குர்ஆன் ஓதத் தெரியாமலேயே அந்நியப்பட்டுவிடுகின்றனர்.

நம்மில் பலரிடம் குர்ஆன் ஓதுங்கள் என்று கூறினால் நேரமில்லை என்றோ, சுத்தமில்லை என்றோ கூறி விலகி விடுகிறோம். சில பள்ளிகளில் இமாம் இல்லாத நேரம் இமாமத் செய்ய நடக்கும் போட்டா போட்டியே(?!) இதற்குச் சான்று. "இமாமத் செய்யுங்க பாய்" என்று சொன்னால், அந்தத் தகுதியெல்லாம் நம்மிடம் இல்லை என்று கூறக்கூடிய நம்மவர்கள், இறைமறையை கற்பதிலும், கற்ற மறையை ஓதுவதிலும் ஏன் பாராமுகம் காட்டுகிறார்கள். இறைமறையை கற்றல், ஓதுதல் போன்றவற்றின் சிறப்புகளை அவர்கள் அறிவார்களேயானால், நிச்சயமாக குர்ஆன் ஓதுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
jsr